இந்தியாவில் அனைத்து பணம் சார்ந்த கொள்கைகளையும் ஆர்.பி.ஐ. பொறுப்பில் உள்ளது. ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் அச்சிட வேண்டும் என்ற முடிவும் ஆர்.பி.ஐ. வசம் உள்ளது. மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை பின்பற்றி ஆர்.பி.ஐ. செயல்பட்டு வருகிறது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் காயின்களை நிறுத்துவது குறித்தும் மத்திய அரசு அறிவுரைகள் அவ்வப்போது வழங்கி வருகிறது.
ஒரு நாணயத்தையோ அல்லது காயினை புழக்கத்தில் இருந்து நீக்கவோ அல்லது புதிதாக வெளியிடவோ மத்திய அரசின் அனுமதி வேண்டும். தற்போது 1 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. மேலும் 30 மற்றும் 50 ரூபாய் நாணயங்களை வெளியிட ஆர்.பி.ஐ. முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் 5 ரூபாய் நாணயங்களை வெளியிடுவதை ஆர்.பி.ஐ. நிறுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டில் 2 வகையான 5 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. ஒன்று பித்தளை வடிவிலும் மற்றொன்று தடிமனான உலோகத்தில் செய்யப்பட்டதாக வெளியிடப்படுகிறது. தடிமனான உலோகத்தில் உருவாக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. தடிமனான உலோகத்திலான 5 ரூபாய் நாணயங்களை விட பித்தளை நாணயங்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தடிமனான உலோகத்திலான 5 ரூபாய் நாணயங்களை உருவாக்க 4 அல்லது 5 உலோக பிளேடுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தடிமனான உலோகத்திலான 5 ரூபாய் நாணயங்களை உருவாக்க பொருட்செலவு அதிகமாக இருப்பதாக உள்ளது.
Also Read :
10 ஆண்டுகள் அனுபவம்.. ரூ.27,221 கோடி ரூபாய் மதிப்பு நிறுவனத்துக்கு சொந்தக்காரர்.. யார் இந்த தேவன்ஷ் ஜெயின்?
ஒரு காயின் மற்றும் நோட்டை உருவாக்கும் செலவு அதன் மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதை புழக்கத்தில் இருந்து நீக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் ஒரு தனி நபர் 5 ரூபாய் நாணயத்தை உருக்கி அதை 5 பிளேடாக மாற்றி ஒன்றை ரூ.2-க்கு விற்றால் அவருக்கு 10 ரூபாய் கிடைக்கும். இந்த 5 ரூபாய் நாணய மதிப்பை விட 2 மடங்கு அதிகமாகும். இதன் காரணமாகவும் தடிமனான 5 ரூபாய் நாணயத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடிமனான 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் இருந்து நீக்குவதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இந்த நாணயங்களை வங்கதேசத்திற்கு கடத்தி அங்கு இதனை உருக்கி அதிக லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவும் இந்த வகையான 5 ரூபாய் நாணயம் புழக்கத்தில் அதிகம் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகையால் வரும் நாட்களில் பித்தளையால் செய்யப்பட்ட 5 ரூபாய் நாணயங்களே அதிகம் புழக்கத்தில் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.