ரூ.27,221 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வரும் கோடீஸ்வரரின் மகனும், பல்வேறு நிர்வாக பதவிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றவருமான 37 வயதான தேவன்ஷ் ஜெயின், ஐநாக்ஸ் விண்டின் முழு நேர இயக்குநராக இருந்து வருகிறார்.
காற்றாலை ஆற்றல் சந்தையில் நன்கு அறியப்பட்ட பெயர் தேவன்ஷ் ஜெயின். மூன்றாம் தலைமுறை தொழிலதிபரான இவர் ஐனாக்ஸ்ஜிஎஃப்எல் (InoxGFL) குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். தேவன்ஷ் ஜெயின் தற்போது ஐனாக்ஸ் விண்டின் முழு நேர இயக்குநராகவும் இருந்து வருகிறார். அவர் ஐனாக்ஸ்ஜிஎஃப்எல் (InoxGFL) குழுமத்தின் தலைவரான இந்தியாவின் முக்கிய கோடீஸ்வர்களில் ஒருவரான விவேக் ஜெயினின் மகன் ஆவார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, விவேக் ஜெயினின் நிகழ்நேர நிகர சொத்து மதிப்பு 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் ஃப்ளோரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாய் கடன் வாங்கி, 2009 ஆம் ஆண்டு ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தை தேவன்ஷ் ஜெயின் தொடங்கினார். டிசம்பர் 9 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 27,221 கோடியாக உள்ளது.
குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூன்று உற்பத்தி ஆலைகளுடன் காற்றாலை ஆற்றல் சந்தையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமாக ஐனாக்ஸ் விண்ட் (Inox Wind) இருந்து வருகிறது. தேவன்ஷ் ஜெயின், காற்றாலை ஆற்றல் துறையில் ஐநாக்ஸ் குழுமத்தின் முன்னோடியாக திகழ்கிறார். 37 வயதான இவர் பல்வேறு நிர்வாக பதவிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் வணிக நிர்வாகத்தில் இரட்டைப் பட்டம் பெற்றுள்ள தேவன்ஷ் ஜெயின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ஐபிஎல் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் மகள் அவர்னா ஜெயினை மணந்தார். ஐநாக்ஸ் விண்டின் தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் வளர்ச்சியை மேற்பார்வையிட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் குழுமத்தின் வெற்றிகரமான பயணத்தை வழிநடத்துவதில் தேவன்ஷ் ஜெயின் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
உலகின் முதல் சுதந்திரமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேவைகள் மற்றும் பங்குச் சந்தைகளில் பராமரிப்பு நிறுவனமான ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட்டின் பட்டியல் அறிவிப்பில் அவர் முக்கிய பங்கு வகித்ததுடன், அதனை வெற்றிகரமாக வழிநடத்தினார் என்பது உற்றுநோக்க வேண்டியது. பார்ச்சூனின் ‘40 அண்டர் ஃபோர்டி’ 2023 மற்றும் ஹுருன் இந்தியாவின் நெக்ஸ்ட்ஜென் லீடர் ஆஃப் தி இயர் 2022 ஆகியவற்றில் அங்கீகாரம் உட்பட பல விருதுகளை தேவன்ஷ் ஜெயின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.