வங்கி பணியாளர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கிடையே வங்கிகளை பிரதிநிதிப்படுத்தும் முன்னணி அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.

இது தொடர்பாக பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த டிசம்பர் மாதம் இந்த திட்டம் நடைமுறைக்கு வரலாம் என்று முன்பு தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதில் இன்னும் தாமதம் ஏற்படக்கூடும் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

விளம்பரம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது அரசால் நடத்தப்படக்கூடிய வங்கிகள் சங்கம் மற்றும் தனியார் வங்கிகள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் வேலை நாட்களாக இருக்கும் என என்ற முக்கியமான வலியுறுத்தலும் இடம்பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 8-ஆம் தேதி அன்று இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை குறித்து தீர்மானம் கொண்டு வந்தன. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கை தற்போது இந்திய ரிசர்வ் வங்கி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

விளம்பரம்

5 நாட்கள் வேலை நாள் திட்டம் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இறுதி முடிவு தற்போது அரசிடமே உள்ளது. இந்த கோரிக்கை குறித்து ரிசர்வ் வங்கி விவாதித்து வருகிறது.

இதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. 5 நாட்கள் மட்டுமே வேலை இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கான சேவை நேரம் குறைக்கப்படாது என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் உறுதியளித்துள்ளன. இதற்காக ஒவ்வொரு நாளும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதே மாதிரியை இந்திய வங்கிகள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும் இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு வாரத்தில் 6 நாட்கள் வேலை இருந்து வருகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – 10 ஆண்டுகள் அனுபவம்.. ரூ.27,221 கோடி ரூபாய் மதிப்பு நிறுவனத்துக்கு சொந்தக்காரர்.. யார் இந்த தேவன்ஷ் ஜெயின்?

தற்போதைய சூழலில் உடனடியாக 5 நாட்கள் மட்டுமே வங்கி வேலை நாள் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

.



Source link