புஷ்பா இரண்டாம் பாகம் உலக அளவில் 1,400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புஷ்பா இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டும் படம் 900 கோடி ரூபாய் வரை வசூலானதாக கூறப்பட்டுள்ளது. இதில், இந்தியில் மட்டும் ரூ.561.50 கோடியும், தமிழ் வெர்ஷனில் ரூ.50 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 11 நாட்களில் 1,409 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1,300 கோடி வசூலித்திருந்தது. தற்போது அதனை முறியடித்து இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக மூன்றாவது இடம் பிடித்துள்ளது ‘புஷ்பா 2’.
Also Read | நிறத்தை வைத்து கேலி… கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த ‘நச்’ பதில்.. வைரல் வீடியோ!
இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய படத்தின் பட்டியலில் அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் ரூ.2,122 கோடியுடன் முதலிடமும், ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ ரூ.1,788 கோடியுடன் இரண்டாமிடமும், மூன்றாவது இடத்தில் ரூ.1,400 கோடிக்கும் அதிகமான ஈட்டி ‘புஷ்பா 2’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை முறியடித்ததன் மூலம் ஏற்கனவே ராஜமௌலியை வீழ்த்திய புஷ்பா 2, பாகுபலி 2 படத்தின் வசூலையும் முறியடிக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
.