ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மற்றொரு பெரிய தயாரிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், அதன் ஏர்போட்ஸ் தயாரிப்பை 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு மாற்றியது. இது ஃபாக்ஸ்கானின் ஐதராபாத் தொழிற்சாலையில் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐபோனுக்குப் பிறகு, இந்தியாவில் முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்ட ஆப்பிளின் இரண்டாவது பெரிய தயாரிப்பாக இது இருந்தது. விரைவான அளவீடு மற்றும் ஏற்றுமதியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுடன் சோதனை உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

விளம்பரம்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மற்றொரு பெரிய தயாரிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆப்பிள் நிறுவனம் தனது பிரபலமான ஏர்போட்ஸ் வயர்லஸ் இயர்போன்களை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்க உள்ளது, இது நிறுவனத்தின் பல்வகைப்படுத்தல் உத்தி மற்றும் இந்தியாவில் அதன் வளர்ந்து வரும் இருப்பை உறுதிப்படுத்துகிறது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே ஐபோன்களின் சில மாடல்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புளூம்பெர்க் அறிக்கையின்படி, முக்கிய ஆப்பிள் சப்ளையர்களான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் அருகே உள்ள அதன் புதிய தயாரிப்பு நிலையத்தில் ஏர்போட்ஸ் அசெம்பிளியை தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களை மேற்கோள்காட்டிய இந்த அறிக்கை, சோதனை உற்பத்தி ஏற்கனவே நடந்து வருவதாகவும், ​​விரைவாகச் செயல்படுத்தும் திட்டங்களுடன், முழு அளவிலான உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறது.

விளம்பரம்
மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?


மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?

ஆப்பிளின் முக்கிய உற்பத்தி மையம்:

இந்த நடவடிக்கையானது ஐபோனைத் தொடர்ந்து, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட இரண்டாவது பெரிய ஆப்பிள் தயாரிப்பாக ஏர்போட்ஸ் இருக்கும். அரசாங்க ஊக்கத்தொகைகள், திறமையான பணியாளர்கள் மற்றும் நாட்டின் தொழில்நுட்பத் திறன்களின் முன்னேற்றம் போன்ற காரணிகளால் உந்தப்பட்டு, இந்தியாவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை ஆப்பிள் சீராக விரிவுப்படுத்தி வருகிறது.

ஆப்பிளின் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா இருப்பது, உலக அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும், நிறுவனத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

விளம்பரம்

இந்தியாவில் ஏர்போட்களின் உற்பத்தியானது, நாட்டிலிருந்து ஆப்பிள் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஏற்கனவே சமீபத்திய மாதங்களில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெரும்பாலான ஏர்போட்கள் தற்போது சீனா மற்றும் வியட்நாமில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலானவை பிற சந்தைகளுக்கு அனுப்பப்படும்.

மேக்புக் உற்பத்தில் சிறது காலம் எடுக்கலாம்:

ஏர்போட்ஸ் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளிவருவது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்த ஆண்டு அக்டோபரில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையில், நிறுவனம் அமெரிக்க ஒப்பந்த உற்பத்தியாளர் ஜபிலின், புனே தொழிற்சாலையில் தயாரிப்புக்கான அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கும் என்று கூறியிருந்தது.

விளம்பரம்

“இது ஐபோன்களுக்காக செய்யப்படும் மெனக்கிடலின் அடிப்படையில், இது ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். மேலும் ஏர்போட்களுக்கான சந்தை, இந்தியாவை விட வெளிநாட்டில் மிகப் பெரியதாக இருப்பதால், உலகளாவிய ஏற்றுமதியில் முக்கியமாக கவனம் செலுத்தக்கூடும்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன்கள்.!


ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன்கள்.!

“ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதால், ஆப்பிள் சீனாவிற்கு வெளியே இரண்டாவது பெரிய உற்பத்தித் தளத்தை உருவாக்கும், இது தற்போது அதன் பெரும்பாலான தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். ஐபோன் உற்பத்தி தொடங்கிய நிலையிலும் அதே திட்டமே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தியாவில் மேக்புக்குகளின் உற்பத்திக்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

விளம்பரம்

“முதலாவதாக, ஆப்பிளின் பிரீமியம் நோட்புக்குகளுக்கான அளவுகள் இங்கு குறைவாகவே உள்ளன, எனவே வணிகமும் அதற்கேற்ப கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போதிய அளவிலான உலகளாவிய உற்பத்தி அளவுகளுடன், இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவது அதிகப்படியான விநியோகத்திற்கு வழிவகுக்கும். எனவே, மேக்புக் தயாரிப்புக்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டி இருக்கலாம்” என்று நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.



Source link