இயக்குநர் அட்லீயை நிறத்தை வைத்து கேலி செய்த பிரபல இந்தி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் ஷர்மாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. இப்படம் தற்போது ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. வருண் தவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார். காலீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இம்மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்தியின் பிரபல டிவி நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் அட்லீ உப்டட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கபில் ஷர்மா, இயக்குநர் அட்லீயை பார்த்து, “பெரிய நடிகர்களை சந்திக்க செல்லும் போது அட்லீ எங்கே என உங்களிடமே கேட்டிருக்கிறார்களா?” என்று அட்லீயின் நிறத்தை மறைமுகமாக கேலி செய்யும் வகையில் கேள்வி கேட்டார்.

இதற்கு அட்லீ அளித்த பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “உங்கள் கேள்வியின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன். அதற்கு பதில் தருகிறேன். இந்த நேரத்தில் எனது முதல் படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

விளம்பரம்

ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் கேட்டது ஸ்கிரிப்ட் தான். என்னுடைய தோற்றம் குறித்து அவர் யோசிக்கவில்லை. நான் கதை கூறிய விதம் அவருக்கு பிடித்திருந்தது. இப்படித்தான் ஒருவரை அணுக வேண்டும் என நினைக்கிறன்.

நாம் ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை முடிவு செய்யக்கூடாது. ஒருவரது மனதை வைத்து தான் அவர் யார் என்று முடிவு செய்ய வேண்டும்” என்று கபில் ஷர்மாவுக்கு நச் பதில் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

இதே நிகழ்ச்சியில் நம்பிக்கை குறித்து அட்லீ பேசியதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “உங்களால் ஒன்றை செய்ய முடியாது என்றால் அதுகுறித்து வாக்குறுதி அளிக்காதீர்கள். ஒருவர் தன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டு வேறு ஒருவரை நம்பும் போது, தோல்வியடைகிறார். உங்கள் வாழ்க்கைகுள் யாரோ ஒருவர் வந்து, அவரை நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நிலை உருவாக எப்போதும் அனுமதிக்காதீர்கள்” என்று பேசியுள்ளார்.

விளம்பரம்

.





Source link