இந்தியில் வருண் தவான் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள பேபி ஜான் என்ற திரைப்படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் விஜய் நடிப்பில் 2016 இல் வெளிவந்த தெறி படத்துடைய ரீமேக் என்று பரவலாக தகவல்கள் பரவி உள்ளன.
இந்நிலையில் பேபி ஜான் படம் குறித்து அந்த படத்துடைய தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான அட்லி சில அப்டேட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழில் வெளியான தெறி படத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரியாக மிரட்டலான நடிப்பை விஜய் இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் கதையை மையமாக வைத்து இந்தியில் நடிகர் வருண் தவான் நடிப்பில் காலிஸ் இயக்கத்தில் பேபி ஜான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோர் தயாரித்துள்ளனர். இம்மாதம் இந்த திரைப்படம் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரமோஷனில் பட குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தெறி படத்துடைய முழுமையான ரீமேக்கா பேபி ஜான் என்று அட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது-
தெறி படத்துடைய முழுமையான ரீமேக் என்று பேபி ஜான் படத்தை கூற முடியாது. பேபி ஜான் படத்தில் நிறைய லொகேஷன்களை மாற்றி உள்ளோம். தெறி படத்தை தழுவி எடுத்துள்ளோம். காட்சிக்கு காட்சி அந்த படத்தை ரீமேக் செய்யவில்லை. அதேபோன்று பேபி ஜான் படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள்.
இது தெறி படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இன்றைய சூழலுக்கு ஏற்ப கதை அம்சங்களில் மாறுபாடு செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பேபி ஜான் உருவாகியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க – முன்னணி நடிகருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாரா நயன்தாரா? வெளியான தகவல்!
பேபி ஜான் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
.