உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்பது குறித்து அறிவதில், சினிமா ரசிகர்கள் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த நடிகர் ஒரு படத்திற்காக மட்டும் அனைத்து வருவாய் மூலமாக சுமார் 1300 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
இது மற்ற எந்த நடிகர்களை விடவும் அதிகமாகும். இந்தியாவைப் பொறுத்தளவில் நடிகர் ஷாருக்கான் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாக அறியப்படுகிறார். இவர் ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரையில் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ரெட் சில்லீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையிலும் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஒரு படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது பிரபல ஹாலிவுட் நடிகரான கீனு ரீவ்ஸ் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார்.
1999 ஆம் ஆண்டு வெளியான தி மேட்ரிக்ஸ் என்ற படத்தின் மூலமாக இவருக்கு வருமானம் மட்டும் 1300 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகும் போது அவர் சம்பளத்துடன் படத்தின் லாபத்திலும் தனக்கு பங்கு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த அடிப்படையில் படம் உருவானபோது இவர் சம்பளமாக 255 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டார். இதனை தவிர்த்து தி மேட்ரிக்ஸ் படத்துடைய தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், சாட்டிலைட் உரிமம், ஓடிடி வருமானம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் கீனு ரீவ்சுக்கு வருமானம் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அவருக்கு ஒட்டுமொத்தமாக தி மேட்ரிக்ஸ் படத்தின் மூலம் 1300 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. தி மேட்ரிக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் ரூ. 10,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதனை தவிர்த்து ஓடிடி தளங்களில் இருந்தும் தொடர்ந்து வருமானம் இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது.
.