கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அந்த குறைபாட்டிற்கான நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தையில் அரிசி கிடைப்பது படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலும் சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Source link