கட்டார் நாட்டை தொடர்ந்து ஓமான் நாடும், இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், துறைமுகம் மற்றும் நடுக்கடலில், 1.90 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தியாவில் உள்ள முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கத்தார் அரசு, இரண்டு மாதங்களுக்கு முன், எடை குறைந்த முட்டைகளுக்கு தடை விதித்தது. ஓமான் நாடும், இந்திய முட்டைகளுக்கு புதிய இறக்குமதி வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, துாத்துக்குடி, கொச்சியில் இருந்து ஓமனுக்கு, 45 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட முட்டைகளை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.