இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படம் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் என செய்திகள் பரவின. இந்த நிலையில் அதனை மறுத்துள்ள இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் – கமல்ஹாசன் காம்போவில் வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இதற்கு சுமார் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டாலும் திரைக்கதை சுமாராக இருந்ததால் போதிய வரவேற்பை பெறவில்லை.

விளம்பரம்

மேலும் இணையதளங்களில் இந்த படத்துடைய காட்சிகள் கேலி கிண்டலுக்கு ஆளானது. இந்தியன் 2 க்ளைமேக்சின்போது மூன்றாம் பாகத்துடைய சில காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் படம் தோல்வி அடைந்ததால் இந்தியன் 3 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் ஓடிடி-யில் வெளியாகும் என பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவலை மீண்டும் மறுத்துள்ள இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டோம். மூன்றாம் பாகம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும்.

விளம்பரம்

இந்தியன் 2 திரைப்படம் ஒரு நல்ல மெசேஜை ரசிகர்களிடம் சொல்ல முயற்சித்தது. அந்த வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வீடு தூய்மையாக இருந்தால் நாடும் தூய்மையாக இருக்கும் என்ற கருத்தை கூறியிருந்தோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க – விவாகரத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவு: ஜெயம் ரவி – ஆர்த்தி ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை!

இதற்கிடையே ஷங்கர் இயக்கியுள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விளம்பரம்

.



Source link