ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாராகி வருகிறார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

பீஸ்ட் படத்திற்கு பின்னர் நெல்சன் திலிப் குமார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருந்தார்.

விளம்பரம்

அவருடன் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி சரோப் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த திரைப்படம் உலக அளவில் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. மேலும் ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஜெயிலர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – இந்தியன் 3 பிரமாண்டமாக தியேட்டர்களில் ரிலீஸாகும்… மீண்டும் உறுதி செய்த இயக்குனர் ஷங்கர்…

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக கூலி படத்துடைய ஷூட்டிங்கை ரஜினிகாந்த் முழுவதுமாக முடிப்பார் என்று கூறப்படுகிறது. கூலி படத்தை மே மாதம் ரிலீஸ் செய்வதற்கு பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.



Source link