OpenAI டிச.18ஆம் தேதியன்று ChatGPT-க்கான அதிகாரப்பூர்வமான போன் நம்பரை அறிமுகப்படுத்தியது. தகுதி பெற்ற பகுதிகளில் வாழும் மக்கள், இந்த போன் நம்பரை அழைத்து நிறுவனத்தின் ChatGPT-ஐ போன் கால் மூலமாக தொடர்பு கொள்ளலாம். கூடுதலாக மீதம் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த கான்டாக்ட் நம்பரை சேமித்து வைத்து வாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதன் மூலமாக ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் சாட்பாட்டுடன் பேசலாம்.
தற்போதுள்ள சூழ்நிலையின்படி, ஒரு மாதத்திற்கு நீங்கள் 15 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் மூலமாக சாட்பாட்டுடன் பேசலாம். எதிர்காலத்தில் இந்த நேரம் மாற்றி அமைக்கப்படும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இனி ChatGPT-யிடம் போன் கால்களில் பேசலாம்
X தளத்தில் ஒரு பதிவை வெளியிடுவதன் மூலமாக OpenAI ChatGPT-க்கான புதிய போன் நம்பரை அறிமுகம் செய்தது. இது 1-800-ChatGPT (+1-800-242-8478) என்ற வேனிட்டி போன் நம்பராக மார்க்கெட் செய்யப்பட்டது. வேனிட்டி போன் நம்பர் என்பது கீபேடில் உள்ள எழுத்துக்களை குறிக்கும். அதாவது A, B மற்றும் C 2-யும், D, E மற்றும் F 3-யும் குறிக்கும். எண்களை எளிதாக ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
800 என்ற கோடு இலவச எண்ணைக் குறிக்கிறது. அதாவது இந்த நம்பருக்கு போன் செய்யும்போது, நீங்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. இந்த அம்சம் தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. எனினும் பிற நாடுகளில் இருக்கும் நபர்களும் இந்த போன் நம்பரை பயன்படுத்தி ChatGPT உபயோகிப்பதற்கு வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க:
அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி… பாதுகாப்பாக இருக்க விசாவின் 10 அசத்தல் டிப்ஸ்..!
போன் நம்பரை சேமித்த பிறகு அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் அல்லது வெப்சைட்டில் மெசேஜ்களை அனுப்புவது போலவே நீங்கள் வாட்ஸ்அப் மூலமாக ChatGPT-க்கு மெசேஜ் அனுப்பலாம். தற்போது சாட்பாட்டுக்கான வாட்ஸ்அப் எக்ஸ்டென்ஷன் டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமே இன்புட் மற்றும் அவுட்புட்டாக ஏற்றுக்கொள்ளும். கூடுதலாக சர்ச், கேன்வாஸ் மற்றும் DALL-E மூலமாக இமேஜ் ஜெனரேஷன் போன்றவை வாட்ஸ்அப் அல்லது ஃபோன் கால்களில் பயன்படுத்துவதற்கு கிடைக்காது.
இதையும் படிக்க:
வைஃபை பிளானில் ஏர்டெல் கொண்டுவந்த புதிய அப்டேட்… இலவச ஜி5 ஓடிடி-யும் இணைப்பு
மேலும், இந்த போன் கால் அம்சத்தை பயன்படுத்துவதற்கு உங்களிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ChatGPT-ஐ டீஃபால்ட் AI பிளாட்ஃபார்மாக மாற்றுவதில் OpenAI தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நிறுவனம் மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதன் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடல்களை வழங்கி வருகிறது. இந்த வருடம் ChatGPT விண்டோஸ் மற்றும் MacOS-இல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.