அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் நீட்டித்துள்ள போதிலும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கான அனுமதி கடந்த 20ம் திகதியுடன் முடிவடைய இருந்த போதிலும், அந்த அனுமதியை மீண்டும் ஜனவரி 10ம் திகதி வரை அரசு நீட்டித்தது.

ஆனால் அதற்கான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.



Source link