Last Updated:
Christmas Cake Expo: கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கேக் கண்காட்சி மக்களைக் கவர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கேக் முக்கிய இடம் வகிக்கும். இதற்காகக் கடைகளில் பல விதங்களில் கேக் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் மக்களைக் கவரும் வகையில் தூத்துக்குடியில் இன்று முதல் முறையாக கேக் கண்காட்சி நடைபெற்றது. தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் இந்த பிரமாண்டமான கேக் கண்காட்சி நடைபெற்றது.
இதில், கேட்டரிங் பயிலும் மாணவர்கள் மூலம் டைட்டானிக் கேக், குழந்தைகளைக் கவரும் வண்ணம் அக்குவா, காடுகள், பொம்மை, பாண்டா போன்ற தீம் கேக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெட்டிங் கேக்குகள், கிறிஸ்மஸ் கேக்குகள், பிளம் கேக்குகள் போன்ற பல வகையான கேக்குகள் இடம்பெற்றுள்ளன. இதனைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தும் வாங்கியும் சென்றனர்.
இதையும் படிங்க: Cracked Heels: குதிகால் வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க… வீட்டிலேயே ஈசியா சரிசெய்யலாம்…
இது குறித்து அங்குள்ள மாணவி கூறுகையில், “தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்த கேக் கண்காட்சி இங்கு நடைபெறுகின்றது. இந்த டைட்டானிக் கேக்கை நாங்கள் தான் தயாரித்தோம். மேலும், நாங்கள் முதல் முறையாக இந்த கிறிஸ்மஸ் தீம் கேக்கை தயாரித்தோம், இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த அக்குவா தீம் கேக்கின் இடையில் காணப்படும் ஃபிஷ் டேங்க் மற்றும் அதில் உள்ள காணப்படும் மீன்களையும் நாங்கள் வைத்துக் கொடுப்போம். பல வகையான கேக்குகள் எங்களிடம் கிடைக்கும், பிளம் கேக், பீட்ரூட், கேரட் கேக், பிளாக் பாரஸ்ட், வைட் ஃபாரஸ்ட், ஐஸ்கிரீம் கேக் மற்றும் பல வகையான கேக்குகளை இங்கு ஒரே இடத்தில் பார்க்கலாம்.
இந்த கண்காட்சியின் முக்கிய காரணம் என்றால் தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ளதால் அனைவரும் விதவிதமான கேக் மாடல்களை தேடுவார்கள். அது அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கும் பொழுது அது அவர்களும் மகிழ்ச்சி தரும் என்ற வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
December 24, 2024 10:33 AM IST
Christmas Cake Expo: கேக்ல நீந்தும் மீன்… சுவையான டைட்டானிக்… மக்களைக் கவர்ந்த கேக் கண்காட்சி…