Last Updated:

Whatsapp | மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்-ஆனதுதொடர்ந்து ப்ளோய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் ஐபோன்கள் உட்பட அதன் ஆதரவுப் பட்டியலில் இருந்து பல டிவைஸ்களை நீக்கி வருகிறது.

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைக் கொண்டு இயங்கும் மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு மொபைல்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன வாட்ஸ்அப் வேலை செய்வதை விரைவில் மெட்டா நிறுவனம் நிறுத்தப் போகிறது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்-ஆனதுதொடர்ந்து ப்ளோய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் ஐபோன்கள் உட்பட அதன் ஆதரவுப் பட்டியலில் இருந்து பல டிவைஸ்களை நீக்கி வருகிறது. யூஸர்களின் ஆப் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்களை உருவாக்கி, அதனை வாட்ஸ்அப்-ல் அப்டேட் செய்து வருகிறது மெட்டா நிறுவனம்.

நிறுவனம் வாட்ஸ்அப்-ல் அப்டேட் செய்யும் புதுப்புது அம்சங்கள் அனைத்துமே லேட்டஸ்ட் OS வெர்ஷன் மற்றும் லேட்டஸ்ட் ஹார்ட்வேர் தேவைப்படும் அம்சங்கள் ஆகும். ஆண்ட்ராய்டு கிட்கேட் வெர்ஷன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன் வரும் ஜனவரி 2025 முதல் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான ஆதரவை இந்த ஓஎஸ் வெர்ஷன் இழக்க உள்ளது. எனவே இன்னும் கிட்கேட் வெர்ஷனை கொண்ட ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்துவோர் தொடர்ந்து மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்த புதிய ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

வரும் ஜனவரி முதல் கீழ்காணும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது…

ஜனவரி 1, 2025 முதல் வாட்ஸ்அப் சப்போர்ட்டை இழக்கும் மொபைல்களின் பட்டியலில் சாம்சங், எல்ஜி, சோனி மற்றும் எச்டிசி போன்ற பிரபலமான பிராண்டுகளும் அடங்கும்.

சாம்சங் மொபைல்கள்:

  • கேலக்ஸி எஸ்3
  • கேலக்ஸி நோட் 2
  • கேலக்ஸி ஏஸ் 3
  • கேலக்ஸி எஸ்4 மினி

எச்.டி.சி. மொபைல்கள்:

  • ஒன் எக்ஸ்
  • ஒன் எக்ஸ் பிளஸ்
  • டிசையர் 500
  • டிசையர் 601

இதையும் படிக்க: ஸ்மார்ட்டாக பயணம் செய்ய வேண்டுமா…? உங்கள் டிவைஸ்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ் இதோ..!

சோனி:

  • எக்ஸ்பீரியா இசட்
  • எக்ஸ்பீரியா எஸ்.பி
  • எக்ஸ்பீரியா டி (Xperia T)
  • எக்ஸ்பீரியா வி

எல்ஜி மொபைல்கள்:

  • ஆப்டிமஸ் ஜி
  • நெக்ஸஸ் 4
  • ஜி2 மினி
  • எல்90

மோட்டோரோலா மொபைல்கள்:

  • மோட்டோ ஜி
  • ரேஸர் எச்டி (Razr HD)
  • மோட்டோ இ 2014

இந்த ஃபோன்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால், ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் வாட்ஸ்அப் பேக்கப் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் மேற்கண்ட மொபைல்களில் ஏதேனும் ஒன்றில் வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்தால், டேட்டா இழப்பை தவிர்க்க உங்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜ் மூலம் வாட்ஸ்அப் சேட் மற்றும் டேட்டா பேக்அப் எடுத்து கொள்ள WhatsApp சப்போர்ட் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: இனி போன் கால் மூலமாகவே ChatGPT-யிடம் பேசலாம்… OpenAI வெளியிட்ட அசத்தல் அப்டேட்…!

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன் வாட்ஸ்அப் இப்போது Meta AI உட்பட பல அம்சங்களை சப்போர்ட் செய்கிறது, இதற்கு நவீன மற்றும் சமீபத்திய ஹார்ட்வேர் தேவைப்படுகிறது. எனவே தான் பழைய மாடல்களை சப்போர்ட் லிஸ்ட்டில் இருந்து நீக்க வாட்ஸ்அப் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.



Source link