Last Updated:
அப்போது இடது கால் மூட்டுப்பகுதியில் பந்து தாக்கியதில் ரோகித் காயமடைந்தார். இதையடுத்து 4 ஆவது போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நிலவியது.
பயிற்சியின்போது தனது காலில் காயம் ஏற்பட்டபோதும் தற்போது நலமுடன் இருப்பதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3 ஆவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு சமனில் முடிந்தது. இந்நிலையில் 4 ஆவது போட்டி மெல்போர்னில் வியாழக்கிழமை தொடங்க இருக்கிறது.
இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இடது கால் மூட்டுப்பகுதியில் பந்து தாக்கியதில் ரோகித் காயமடைந்தார். இதையடுத்து 4 ஆவது போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா தான் காயமடைந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் எந்த ஆர்டரில் களமிறங்குவார் என்பதை ரோகித் சர்மா அறிவிக்கவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 24, 2024 2:21 PM IST