Last Updated:

சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். நடிகர் அல்லு அர்ஜுனை காண வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்

News18

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள படங்களை 4,000 ரூபாய் வரை கொடுத்து பார்க்கலாம் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோக்களை வழிபடும் படங்களை விட்டுவிட்டு ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் கருத்துள்ள படங்களை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட படங்களை இயக்கி முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார் ரஞ்சித்.

இதே போன்று அவர் பரியேறும் பெருமாள், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களையும் தயாரித்திருக்கிறார். அடுத்ததாக ரஞ்சித் சார்பட்டா பரம்பரையின் இரண்டாவது படத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். நடிகர் அல்லு அர்ஜுனை காண வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.

அவர்களில் ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐதராபாத் துணை காவல் ஆணையர் விஷ்ணு மூர்த்தி, “ஹீரோவை வணங்கும் படங்களுக்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீணாக்காமல் கருத்துள்ள படங்களுக்கு செலவிடுங்கள். இயக்குனர் பா. ரஞ்சித் படங்களை 2000 அல்லது 4000 ரூபாய் வரை கொடுத்து பார்க்கலாம். ஹீரோக்களை வணங்கும் படங்களை நீங்கள் குறைந்த விலைக்கு ஓடிடி தளங்களில் பார்க்கலாம்” என்று கூறி இருந்தார்.

இதையும் படிங்க – ஜெய்பீம் படத்துக்கு இல்லாமல் கடத்தல்காரர் ‘புஷ்பா’வுக்கு தேசிய விருதா? – அமைச்சர் சீதக்கா ஆதங்கம்

புஷ்பா 2 படத்தை அவர் ஹீரோக்களை வணங்கும் படம் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். புஷ்பா 2 திரைப்படம் ரூ. 1600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள நிலையில், தற்போது காவல்துறை அதிகாரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக காவல்துறை அதிகாரி விஷ்ணு மூர்த்தி தற்போது சஸ்பெண்டில் உள்ளார். அவரது பேட்டி வைரலாகியுள்ள சூழலில், அவர் மீது மேலும் நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



Source link