Last Updated:
பேபி ஜான் படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த அட்லீ பேபி ஜான் தெறி படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இன்றைய சூழலுக்கு ஏற்ப கதை அம்சங்களில் மாறுபாடு செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பேபி ஜான் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாளை வெளியாகவுள்ள அட்லீ தயாரித்திருக்கும் பேபி ஜான் என்ற திரைப்படம் வெற்றி பெறுவதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் தான் நடித்துள்ள படங்களை தவிர்த்து மற்ற படங்களை வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை விஜய் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அட்லீ படம் வெற்றி பெற அவர் வாழ்த்து கூறியிருப்பது எக்ஸ் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழில் வெளியான தெறி படத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரியாக மிரட்டலான நடிப்பை விஜய் இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் கதையை மையமாக வைத்து இந்தியில் நடிகர் வருண் தவான் நடிப்பில் காலிஸ் இயக்கத்தில் பேபி ஜான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோர் தயாரித்துள்ளனர். நாளை டிசம்பர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
அட்லீ கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு ஜீவா நடிப்பில் 2019 இல் வெளிவந்த கீ என்ற படத்தை இயக்கிய காலீஸ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் பேபி ஜான் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Best wishes to @Atlee_dir @Varun_dvn @KeerthyOfficial @priyaatlee #WamiqaGabbi @MusicThaman @kalees_dir @AntonyLRuben and the entire #BabyJohn team for the release tomorrow.
Wishing you all a blockbuster success ♥️ pic.twitter.com/uaoxmJ1cr8— Vijay (@actorvijay) December 24, 2024
பேபி ஜான் படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த அட்லீ பேபி ஜான் தெறி படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இன்றைய சூழலுக்கு ஏற்ப கதை அம்சங்களில் மாறுபாடு செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பேபி ஜான் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
December 24, 2024 6:39 PM IST