Last Updated:
முன்னதாக சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் கேங்ஸ்டர் டிராமா ஜானரில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நடிகர் சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உடன் தனது 44 ஆவது படத்தில் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜெயராம், கருணாகரன், ஜோதி, ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த படத்துடைய டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
முன்னதாக சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் கேங்ஸ்டர் டிராமா ஜானரில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலையில் சூர்யா 44 படத்திற்கு “ஒருவன்” என்று டைட்டில் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலர் “ஜானி” அல்லது “கல்ட்” என்று பெயர் வைக்கப்படலாம் என இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதே போன்று சூர்யாவின் ரசிகர்கள் டைட்டில் குறித்த தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரிஷா, யோகி பாபு, சுவாசிகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
December 24, 2024 1:02 PM IST