Last Updated:
திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பல நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், டிக்கெட் கட்டணம் உயராது என திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், ஏசி திரையரங்குகளுக்கு நான்கு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் ஏசி திரையரங்குகளுக்கு நான்கு ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: ‘பா. ரஞ்சித் படங்களை ரூ. 4000 கொடுத்துக் கூட பார்க்கலாம்…’ – போலீஸ் உயரதிகாரி பேச்சால் பரபரப்பு…
பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்த திருப்பூர் சுப்ரமணியம், திரையரங்குகளில் கட்டணம் உயராது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், திரையரங்கு பராமறிப்பு கட்டணத்தால் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
December 25, 2024 10:29 AM IST