Last Updated:

விபத்துக்கு முன் விமானம் வானத்தில் பலமுறை வட்டமடித்தது. எனினும், சிறிது நேரத்திலேயே விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது.

News18

கஜகஸ்தான் நாட்டில் 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக கஜகஸ்தான் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து கஜகஸ்தானின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அக்டாவ் நகருக்கு அருகே வெடித்துச் சிதறியது. விமானத்தில் பயணித்த 72 பேரின் நிலை என்னவென்பது தெரியவில்லை.

விபத்துக்கு முன் விமானம் வானத்தில் பலமுறை வட்டமடித்தது. எனினும், சிறிது நேரத்திலேயே விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது.

விபத்துக்குள்ளான விமானம் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. விமானத்தில் 67 பயணிகள் உட்பட 72 பேர் இருந்தனர். கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், விமானம் வானில் வட்டமடித்து தீப்பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/உலகம்/

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்துச் சிதறியது.. அதிர்ச்சி வீடியோ.. 72 பேரின் நிலை என்ன?





Source link