Last Updated:
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44ஆவது படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜெயராம், கருணாகரன், ஜோதி, ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
முன்னதாக சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில், அனைத்து ரவுடிசத்தையும் விட்டுவிடுகிறேன் என பூஜா ஹெக்டேவிடம் சூர்யா சொல்வதுபோல அமைந்துள்ள டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘ரெட்ரோ’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா வன்முறையில் ஈடுபடுவதுபோலவும், அதை தொடரப்போவதில்லை என பூஜா ஹெக்டேவிடம் சத்தியம் செய்து, திருமணமான பிறகும், வன்முறையில் ஈடுபடுவது போலவும் அந்த டீசர் வெளியாகியுள்ளது.
‘ரெட்ரோ’ திரைப்படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் ‘மகான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைவதால், இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
December 25, 2024 12:58 PM IST