Last Updated:
துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார். படத்தில் அவருக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும், படம் முழுவதும் அஜித்தின் சப்போர்ட்டிங் கேரக்டராக மஞ்சு வாரியர் இடம்பெற்றார். இதற்கு முன்னதாக அவர் நடித்த அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டை பெற்று தந்தது.
24 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக மஞ்சு வாரியர் அந்த படத்தில் இருந்து விலகினார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார். படத்தில் அவருக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும், படம் முழுவதும் அஜித்தின் சப்போர்ட்டிங் கேரக்டராக மஞ்சு வாரியர் இடம்பெற்றார். இதற்கு முன்னதாக அவர் நடித்த அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டை பெற்று தந்தது.
எமோஷனல் காட்சிகள் அதிகம் கொண்ட இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
இருப்பினும் இந்த கேரக்டருக்கு படத்தில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து மஞ்சு வாரியருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அஜித் உடன் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படம் 2000 ஆண்டின் போது வெளிவந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் மஞ்சு வாரியர் நடிப்பதாக இருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் தனது திருமணத்திற்கு மஞ்சு வாரியர் தயாராகி வந்ததால் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மறைந்த நடிகை சௌந்தர்யாவை பட குழுவினர் அணுகினர். அவர் இந்த படத்தில் தனக்கு இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது சரியானதாக இருக்காது என்று கூறி மறுத்துவிட்டார்.
இதன் பின்னர் பட குழுவினர் ஐஸ்வர்யா ராயை அணுகினர். அவர் சம்மதித்து படத்தில் நடித்தார். அந்த வகையில் முன்பே 24 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் படத்தில் மஞ்சுவாரியர் நடிப்பதாக இருந்தது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் தமிழ் சினிமாவில் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றது என்பதை கவனிக்கத்தக்கது.
December 25, 2024 4:29 PM IST