Last Updated:

பட வெளியீட்டுக்கு இன்னும் 15 நாட்களுக்கு குறைவாகவே இருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் பாடல் இல்லையா என்ற கேள்வி எழுந்து வந்தது

News18

விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த வரும் விடா முயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவதற்காக தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அனிருத் இசையில் உருவாகி இருக்கக்கூடிய படத்தின் முதல் பாடலை நாளை மறுநாள் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

பட வெளியீட்டுக்கு இன்னும் 15 நாட்களுக்கு குறைவாகவே இருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் பாடல் இல்லையா என்ற கேள்வி எழுந்து வந்தது.

இதையும் படிங்க – 24 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துடன் நடிக்கவிருந்த மஞ்சு வாரியர்… என்ன படம் தெரியுமா?

இந்த நிலையில் தான் உடல் எடையை குறைத்த அஜித் இடம்பெறும் காட்சிகளை சமீபத்தில் படமாக்கினர். தற்போது அதற்கான அந்த பாடலை பட குழுவினர் நாளை மறுதினம் வெளியிடுகின்றனர்.

இதையொட்டி பாடல் வரியான #Sawadeeka என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.





Source link