இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட பல்வேறு மதங்களின் தாயகமாக பூமி உள்ளது. இதற்கிடையில், 2050ல் எந்த நாட்டில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை இருக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2050ல் (311 மில்லியன்) இந்தியா, இந்தோனேசியாவை விஞ்சி அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘உலக மதங்களின் எதிர்காலம்: மக்கள்தொகை வளர்ச்சி கணிப்புகள், 2010-2050’ (‘The Future of World Religions: Population Growth Projections) அறிக்கையில், பாகிஸ்தான் இரண்டாவதாக அதிக முஸ்லிம்கள் (273 மில்லியன்) கொண்ட நாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானை தொடர்ந்து, 2010இல் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களை கொண்ட நாடான இந்தோனேசியா, 2050இல் 257 மில்லியன் முஸ்லிம்களுடன் மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும்?
இந்துக்கள் உலகின் மூன்றாவது பெரிய மதக் குழுவாக மாறுவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டில், இந்தியாவில் 31 கோடி முஸ்லிம்கள் இருப்பார்கள் என்றும், மக்கள் தொகையில் 11% பேர் முஸ்லிம்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய இந்து மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் என்றும், அது 1.03 பில்லியனாக உயரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தோனேசியாவில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது.
Also Read: 12 மனைவிகள்.. 102 குழந்தைகள்.. 578 பேரப்பிள்ளைகள்.. யார் இந்த மனிதர்.. எங்கே வசிக்கிறார்?
பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு, வளர்ந்து வரும் முஸ்லீம் மக்கள் தொகைக்கு பெரும்பாலும் இளம் வயது மற்றும் அதிக கருவுறுதல் விகிதமே காரணம் என்று தெரியவந்துள்ளது. அதிக கருவுறுதல் விகிதம் காரணமாக, இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை வேகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2010இல், மொத்த மக்கள் தொகையில் 14.4% முஸ்லிம்கள் இருந்தனர். இது 2050 இல் இது 18.4% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் முஸ்லீம் மக்கள் தொகையை விட இந்தியாவின் இந்து மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது மொத்த மக்கள் தொகையில் 2.5% ஆக இருக்கும் இந்தியாவின் கிறிஸ்தவ மக்கள் தொகை 2050-ல் 2.3% ஆக குறையும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பியூ ஆராய்ச்சி மையம், மற்றொரு அறிக்கையில், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாக முஸ்லிம்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையை விட முஸ்லீம் மக்கள் தொகை வேகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மதமாக உள்ளது. தற்போதைய மக்கள் தொகைப் போக்குகள் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இது சுமார் 72% ஆகும்.
இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் தொகை உட்பட உலகளாவிய முஸ்லீம் மக்கள் தொகை ஆகும். தற்போது, இந்தோனேசியா உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2050ஆம் ஆண்டில், இந்தியா 310 மில்லியன் முஸ்லிம்களுடன் இந்தோனேசியாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
December 27, 2024 12:18 PM IST