Last Updated:

1996 ஆம் ஆண்டில் கேப்பிட்டல் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.

News18

இந்தியாவில் உள்ள பல தொழிலதிபர்கள் தங்களுடைய தொழிலை ஆதியில் இருந்து ஆரம்பித்து, அதன் பிறகு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை எழுப்பிய பல கதைகள் உண்டு. அவர்களில் பலர் பின்னர் தங்களுடைய நிறுவனங்களை டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற மிகப்பெரிய பிராண்டுகளுக்கு விற்பனை செய்து உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நபரை பற்றிய பதிவு இது. 1996 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய நிறுவனத்தை ஆரம்பித்து, பின்னர் அதனை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்து விட்டார்.

‘Ching’s secret’ மற்றும் ‘Smith & Jones’ போன்ற பிராண்டுகளுக்கு சொந்தக்காரரான அஜய் குப்தா கேப்பிட்டல் ஃபுட்ஸ் (Capital Foods) நிறுவனத்தின் ஃபவுண்டர் மற்றும் மேனேஜிங் டைரக்டர். குப்தா தன்னுடைய கெரியரை ஒரு ஆலோசகராகவே ஆரம்பித்து உள்ளார். இவர் CCS மீருட் பல்கலைக்கழகத்தில் கலைப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். மார்க்கெட்டிங் ஏஜென்சி வைத்து நடத்தி வந்த குப்தாவிற்கு சொந்தமாக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்து உள்ளது.

பின்னர் அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் அதனை அழகாக பயன்படுத்தி, 1996 ஆம் ஆண்டில் கேப்பிட்டல் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். பொதுவாக இந்திய பெண்களுக்கு ஹோட்டல்களில் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும் என்ற விஷயத்தில் அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவுவதற்காக குப்தா பல்வேறு விதமான ப்ராடக்டுகளை தன்னுடைய நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்தார்.

இந்த நிறுவனம் சட்னி, மசாலா, சாஸ் வகைகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது போன்ற சமையலுக்கு தேவையான ப்ராடக்டுகளை ரெடிமேடாக விற்பனை செய்து வந்தன. இந்த பிராண்டுகள் இரண்டுமே ‘Ching’s secret’ மற்றும் ‘Smith & Jones’ என்ற வெளிநாட்டு பெயர்களை கொண்டிருந்தன. நன்கு வளர்ந்து வந்த இந்த நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்காக Nestle, Unilever மற்றும் Tata போன்ற பெரிய நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன.

ஆனால் இந்த பந்தயத்தில் இறுதியாக டாடா குழுமத்திற்கு வெற்றி கிடைத்தது. அந்த வகையில் டாட்டா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் கேப்பிட்டல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்கை பெற்றது. பேக்கேஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுத்துறையில் நல்ல பெயர் பெற்ற இந்த கேப்பிட்டல் ஃபுட்ஸ் தரமான பிராண்டுகளையும், எக்கச்சக்கமான ப்ராடக்டுகளை விற்பனை செய்து அதிக அளவு வாடிக்கையாளர் தளத்தை பெற்றுள்ள பெருமையை கொண்டுள்ளது.

எனவே என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு விஷயத்தை நினைத்து, தொடர்ந்து அதனை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெற்றிருந்தால் அதற்கான வாய்ப்பு நிச்சயமாக உங்களைத் தேடி வரும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே அஜய் குப்தாவின் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது.



Source link