Last Updated:

Rohit Sharma | பிடிஐ அறிக்கையின்படி, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்டெ் முடிவுக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மா

டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பார்முடன் திணறி வரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரில் தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஹிட்மேனால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் ரோஹித் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்களில் இந்திய கேப்டனின் பேட்டிங்கில் இருந்து 22 ரன்கள் மட்டுமே வந்துள்ளது.

ஆகாஷ்தீப் அவரை விட அதிக ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்திய கேப்டனின் இந்த ஏமாற்றத்துக்குப் பிறகு, அவரது ஓய்வு குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன. பிடிஐ அறிக்கையின்படி, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்டெ் முடிவுக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தற்போது மெல்போர்னில் இருக்கிறார். மேலும் அவர் ரோஹித்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தோல்வியடைந்தால், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் அறிக்கை கூறுகிறது. தற்போது இந்த தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

ரோஹித் சர்மாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் ஆஸ்திரேலிய தொடரின் முதல் டெஸ்ட்டில் அவர் விளையாடவில்லை. முதல் டெஸ்டில் கே.எல்.ராகுலின் ஓபனிங் அருமையாக இருந்ததால் இரண்டாவது டெஸ்டிலும் கே.எல்.ராகுல் ஓபனிங்கில் இறங்கினார். வழக்கமாக ஓபனிங் இறங்கும் ரோஹித் பின்வரிசையில் இறங்கி சொதப்பினார். இதனால் மெல்போரன் டெஸ்டில் ஓபனிங் இறங்கிய ரோஹித் மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார்.

சிட்னி போட்டியிலும் ரோஹித் ஓபனிங் தான் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வாகவில்லை என்றால் ஆஸ்திரேலிய தொடரே ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்டராக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.



Source link