Last Updated:

யார் வேண்டுமானாலும் பணக்காரராக மாறலாம். ஆனால் உங்களுடைய செல்வத்தை எப்படி அதிகரிப்பது மற்றும் அதனை எப்படி தக்க வைப்பது என்ற வித்தையை நீங்கள் அதற்கு கற்று இருக்க வேண்டும். புத்திசாலித்தனமான முதலீடுகள் நாளடைவில் உங்களை பணக்காரராக மாற்றும். அதோடு  பணத்தை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக முதலீடு செய்வதும் பணத்தை சிறந்த முறையில் கையாளுவதும் அவசியம்.

News18

யார் வேண்டுமானாலும் பணக்காரராக மாறலாம். ஆனால் உங்களுடைய செல்வத்தை எப்படி அதிகரிப்பது மற்றும் அதனை எப்படி தக்க வைப்பது என்ற வித்தையை நீங்கள் அதற்கு கற்று இருக்க வேண்டும். புத்திசாலித்தனமான முதலீடுகள் நாளடைவில் உங்களை பணக்காரராக மாற்றும். அதோடு  பணத்தை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக முதலீடு செய்வதும் பணத்தை சிறந்த முறையில் கையாளுவதும் அவசியம்.

2025 ஆம் ஆண்டிற்குள் நாம் நுழைய இருக்கும் இந்த சமயத்தில் உங்களுடைய பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்தி, புத்திசாலித்தனமான பொருளாதார பழக்கங்களை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். இதில் எளிதில் அடையக்கூடிய வகையில் பொருளாதார இலக்குகளை அமைப்பது முதல் படி. எனவே இந்த பதிவில் உங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி 2025 இல் உங்களை பணக்காரராக மாற்ற உதவும் ஒரு சில எக்ஸ்பர்ட் டிப்ஸ்களை பார்க்கலாம்.

பட்ஜெட்: 50-30-20 விதியை இதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டும். அதாவது உங்களுடைய வருமானத்தில் 50 சதவீதம் அத்தியாவசியங்களுக்கான செலவுகளுக்காகவும், 30 சதவீதம் எதிர்பாராத செலவுகளுக்காகவும் மற்றும் 20% சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்காகவும் ஒதுக்கி வைப்பதாக அவசியம். உங்களுடைய செலவுகளை கண்காணிக்கவும், வீண் செலவுகளை கண்டுபிடிக்கவும், உங்களுடைய பட்ஜெட்டை விட அதிக செலவுகள் செய்யாமல் இருப்பதற்கும் ஒரு சில பட்ஜெட்டிங் அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

முதலீட்டு யுக்தி: குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டு ஆப்ஷன்களை தேர்வு செய்யுங்கள். உதாரணமாக மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஃபிக்சட் டெபாசிட்டுகள் போன்றவை. தொடர்ச்சியான வரவுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் அல்லது NPS போன்ற ஓய்வு கால திட்டங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

எமர்ஜென்சி ஃபண்ட்: உங்களுடைய 6 முதல் 12 மாத சம்பளத்தை எமர்ஜென்சி ஃபண்ட் என்ற பெயரில் நீங்கள் தனியாக சேமித்து வைத்திருக்க வேண்டும். இது அவசரகால சூழ்நிலையின் போது கடன் வாங்குவதை தவிர்ப்பதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கடனை நிர்வகித்தல்: அதிக வட்டிக்கொண்ட லோன்கள், கிரெடிட் கார்டு பில்லுகள் மற்றும் பர்சனல் லோன்களை முதலில் செலுத்தி விடுவதில் கவனம் செலுத்துங்கள். இது வீண் பொருளாதார சுமையை தடுப்பதற்கு உதவும்.

பொருளாதார திட்டமிடல் மற்றும் கல்வி: உடனடியாக லாபம் ஈட்டி தரக்கூடிய அதிக ரிஸ்க் நிறைந்த முதலீடுகளில் ஒருபோதும் ஈடுபட வேண்டாம். எப்பொழுதும் எச்சரிக்கையோடு புத்திசாலித்தனமான முதலீடுகளில் ஈடுபடுவது அவசியம்.

வரி திட்டமிடல்: உங்களுடைய வரிப்பணத்தை குறைத்து, அதிகபட்ச டிடக்ஷன்களை பெறுவதற்கு டாக்ஸ் ப்ரொஃபஷனல் ஆலோசனையை பெறவும்.

இன்சூரன்ஸ்: உங்களிடம் போதுமான லைஃப், ஹெல்த், டிசெபிலிட்டி மற்றும் லயாபலிட்டி இன்சூரன்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆடம்பர செலவுகள் உங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த புத்திசாலித்தனமான பொருளாதார வழக்கங்களை அமல்படுத்தினால் நிச்சயமாக வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பொருளாதார எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

2025ல் பணக்காரராக வேண்டுமா.. எக்ஸ்பர்ட்ஸ் கொடுக்கும் அசத்தலான டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!



Source link