Last Updated:

Honey Rose | சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹனி ரோஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்ட ஒரு பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

News18

பிரபல நடிகை ஹனிரோஸின் முகநூல் பதிவின் கீழ் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 27 பேர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையின் பகீர் குற்றச்சாட்டு என்ன?

மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை ஹனிரோஸ். ‘முதல்கனவே’, ‘சிங்கம் புலி’ போன்ற தமிழ் படங்களிலும இவர் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் 60 வயதைக் கடந்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு, 30 வயதான ஹனிரோஸ் தாயாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்ட ஒரு பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தன்னைக் குறித்து வேண்டுமென்றே ஒரு நபர் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரது பெயரை ஹனிரோஸ் குறிப்பிடவில்லை.

Also Read: Pushpa 2 | அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்த ‘புஷ்பா 2’  வசூல் – ஒன்று மட்டும் பாக்கி!

இந்த பதிவை படித்த சிலர் “அந்த ஆபாச நபருக்கு நீங்கள் எந்த பதிலடியும் கொடுக்கவில்லையே, அதை நீங்கள் ரசிக்கிறீர்களா?” என்று கேட்டிருந்தனர். அதோடு பலரும் தகாத வார்த்தைகளால் மோசமான கமெண்ட்களை பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து தனது பதிவுக்கு ஆபாச கமெண்ட்களை பதிவிட்ட 30 பேருக்கு எதிராக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட் போட்ட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அதிரடி நடவடிக்கையாக கொச்சி அருகேயுள்ள கும்பளம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவரை கைது செய்துள்ளனர். மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக ஏற்கெனவே பெரும் பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகைக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாச பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link