Last Updated:
Honey Rose | அதைத் தொடர்ந்து அவரின் நிறுவனம் தொடர்பாக நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தேன். இந்த நிலையில், அவர் தொடர்ந்து என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார்.
மலையாள நடிகை ஹனி ரோஸ் பெயர் குறிப்பிடாமல் தொழிலதிபர் ஒருவர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும், அது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் நடிப்பில் அடுத்ததாக ‘ரேச்சல்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இதனிடையே ஹனி ரோஸ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் நன்றாக பழகிய தொழிலதிபரின் வணிக நிறுவன திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நானும் மற்ற நடிகைகளைப் போல சென்றேன். அவர் பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். என்னைப் பற்றி இதுபோன்ற கருத்துகளைச் சொல்வதை ஏற்க முடியாது என்றேன்.
Also Read: Cinema | ‘கரகாட்டக்காரன்’, ‘த்ரிஷ்யம்’ படங்கள் இந்த நடிகை நடிக்க வேண்டியது… யார் தெரியுமா?
அதைத் தொடர்ந்து அவரின் நிறுவனம் தொடர்பாக நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தேன். இந்த நிலையில், அவர் தொடர்ந்து என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார். ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா?, இப்படியே தொடர்ந்து நடந்தால் சட்டத்தை நாடுவேன்” என எச்சரித்துள்ளார்.
January 06, 2025 4:18 PM IST