Last Updated:

Game Changer | இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தமிழக விநியோக உரிமை பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியாக 4 நாட்களே உள்ள நிலையில் சிக்கல் நீடித்து வருகிறது.

News18

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு மறைமுகமாக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கு காரணம் லைகா நிறுவனம் என கூறப்படுகிறது. ‘இந்தியன் 3’ படத்தை ஷங்கர் முடித்துக்கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியன்-3’ படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ.65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாக லைகா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என லைகா தரப்பில் கூட்டமைப்பில் லைகா முறையீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: OTT Spot | படம் தொடங்கி 3 நிமிடத்திலேயே ட்விஸ்ட்.. விறுவிறுப்பான கதைகளம்… கடைசி வரை சஸ்பென்ஸ்.. இந்த த்ரில்லர் படத்தை பார்த்திருக்கீங்களா?

அதேபோல் ‘இந்தியன் 3’ திரைப்படத்தில் படமாக்கப்பட வேண்டிய (மீதமுள்ள) பாடல் மற்றும் காட்சிகளை எடுக்காமல் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என ஷங்கர் தரப்பில் திரைத்துறை கூட்டமைப்பினரிடம் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக நான்கு நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் 10ஆம் தேதி வெளியாகவுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்கு ஒப்பந்தம் தமிழகத்தில் இன்னும் தொடங்கவில்லை. லைகா, ஷங்கர், கூட்டமைப்பு நிர்வாகிகள் தரப்பினர் இடையே நேற்று முன்தினம் வரை பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தமிழக விநியோக உரிமை பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியாக 4 நாட்களே உள்ள நிலையில் சிக்கல் நீடித்து வருகிறது.



Source link