கனடாவில் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அந்நாட்டின் 2வது மிகப் பெரிய சமூகமாக சீக்கிய மக்களின் எண்ணிக்கை இருந்தது. இதனால், சீக்கியர்களின் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்க ஜஸ்டீன் ட்ரூடோ எண்ணினார். இதன் விளைவாக கனடா அரசியலில் சீக்கியர்கள் மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இந்நிலையில் சீக்கிய மக்களின் ஆதரவுடன் 2021 பொதுத் தேர்தலில் ஜஸ்டீன் ட்ரூடோ மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

காலிஸ்தான் அமைப்பு தலைவர் படுகொலை

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டது இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் விழ முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைள ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்தார். இதனால் சொந்த கட்சிக்குள்ளேயே ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளிப்படையாகவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றனர்.

ஜஸ்டீன் ட்ரூடோ ராஜினாமா

இந்நிலையில், நடப்பாண்டு கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ஜஸ்டீன் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கனடா மக்களின் நலனுக்காக ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வரும் மார்ச் 24ஆம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அந்நாட்டின் கவர்னர் ஜெனரலுக்கு வலியுறுத்தி உள்ளார். இதனிடையே, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 8 பேர் பிரதமருக்கான ரேசில் இருக்கும் நிலையில் அதில் 2 பேர் இந்திய வம்சாவெளியினர் ஆவர். இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆன்ந்துக்கு பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

யார் இந்த அனிதா ஆனந்த்?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவிற்கு பிறகு அடுத்த பிரதமர் லிஸ்டில் டாப் 5-ல் இருப்பவர் தான் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த். தற்போது அவர் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வரத்தக அமைச்சராக உள்ளார். 57 வயதான அனிதா ஆனந்த் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தார். 2010 ஆம் ஆண்டு அரசியலுக்கு அவர் அடியெடுத்து வைத்ததில் இருந்து கட்சியின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அனிதா ஆனந்த் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வுகளில் கலை பட்டம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல் பட்டம், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம், மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

அனிதா ஆனந்தின் குடும்ப பின்னணி

அனிதா ஆனந்த் நோவா ஸ்கோஷியாவின் கென்ட்வில்லில் பிறந்தார். அவரது தாயார் சரோஜ் டி. ராம் மற்றும் தந்தை எஸ்.வி. ஆனந்த் ஆகிய இருவரும்  மருத்துவர்கள். அவருக்கு கீதா மற்றும் சோனியா அனந்த் என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

அனிதா அனந்த் தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக பதவி வகித்த போது கொரோனா நேரத்தில் தடுப்பூசிகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளுக்காக அவர் பாராட்டப்பட்டார். 2021ல் கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின் ரஷ்யாவுடன் நடைபெற்ற போரின் போது உக்ரைனை ஆதரிக்கவும், கனடா ஆயுதப் படைகளில் நடந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்வு காண முக்கிய பொறுப்புகளை ஏற்றார் என்பது குறிப்பிடதக்கது.



Source link