இந்த சாட்டிலைட் ஃபோன் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? ஸ்மார்ட் ஃபோனிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது? என்ற தகவல் பலருக்கும் தெரியாது. ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சாட்டிலைட்ஃபோன் ஆகிய இந்த இரண்டு தகவல் தொடர்பு சாதனங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதன் அடிப்படைகளை நீங்கள் புரிந்து கொள்ள உதவும் வகையிலான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பொதுவாக பார்த்தால் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் சாட்டிலைட் ஃபோன்கள் ஆகிய இரண்டுமே நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்தான். ஆனால், இரண்டும் செயல்படும் விதம் முற்றிலும் வேறுபட்டது. நம் அனைவரின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் சாதாரண டெலிகாம் நெட்வொர்க்கை சார்ந்து இருக்கும் நிலையில், மறுபுறம் சாட்டிலைட் ஃபோன்கள் நேரடியாக செயற்கைக்கோள்களுடன் கனெக்ட்டாவதன் மூலம் செயல்படுகின்றன. இரண்டு டிவைஸ்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும், சாட்டிலைட் ஃபோன்கள் செயல்படும் விதத்தையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஸ்மார்ட்ஃபோன் vs சாட்டிலைட்ஃபோன் இடையிலான முக்கிய வேறுபாடு:
ஸ்மார்ட் ஃபோன்கள் பொதுவாக டெலிபோன் டவர்கள் மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க்ஸ் மூலம் வேலை செய்கின்றன. கால்ஸ், மெசேஜ் அனுப்புதல் மற்றும் இன்டர்நெட் யூசேஜ் ஆகியவற்றுக்கு இந்த சாதனத்திற்கு 4G, 5G அல்லது Wi-Fi நெட்வொர்க் தேவைப்படுகிறது. இவற்றில் எந்தவொரு நெட்வொர்க் கவரேஜ் இல்லை என்றாலும், நம்மால் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்த முடியாது.
அதே நேரம் சாட்டிலைட் ஃபோன்கள், டெலிபோன் டவர்களுக்கு பதிலாக பூமிக்கு மேலே உள்ள செயற்கைக் கோள்களுடன் நேரடியாக இணைக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால் சாட்டிலைட் ஃபோன்களை பயன்படுத்த நெட்வொர்க் டவர் தேவையில்லை. டெலிகாம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் உதாரணமாக அடர்ந்த காடு, பாலைவனம், கடல், மலை போன்ற நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் கூட, சாட்டிலைட் ஃபோன்களை எளிதாக பயன்படுத்தலாம்.
சாட்டிலைட் ஃபோன்கள் எப்படி வேலை செய்கின்றன?
இந்த ஃபோன்களில் வானில் சுற்றும் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சிறப்பு ஆண்டெனா கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கால் செய்யும்போது அல்லது மெசேஜ் அனுப்பும்போது, அந்த சிக்னல் நேரடியாக செயற்கைக்கோளை அடைகிறது. பின்னர் இந்த சிக்னல் மற்றொரு செயற்கைக்கோள் அல்லது கிரவுன்ட் ஸ்டேஷன் வழியாக யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களை சென்றடைகிறது. அதே நேரம் சாதாரண மொபைல் நெட்வொர்க்கை விட இந்த செயல்முறை அதிக நேரம் மற்றும் எனர்ஜியை எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிக்க: Snapdragon 4 Gen 2 ப்ராசஸருடன் இந்தியாவில் அறிமுகமான Redmi 14C 5G மொபைல்…!
சாட்டிலைட் ஃபோன்களின் நன்மைகள்…
- தொலைதூரப் பகுதிகளில் நெட்வொர்க் இல்லாதபோதும் கூட இதை பயன்படுத்தலாம்.
- பூகம்பம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின்போது தகவல் தொடர்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ராணுவம், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளிலும் இந்த வகை ஃபோன் மிகவும் நம்பகமானது என்ற அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க: போன் அழைப்புகளுக்கு பதிலளிக்க வெறுப்பா இருக்கா…? இனி உங்களுக்கு பதில் பிக்ஸல் போன் பதிலளிக்கும்…!
எனினும், சாட்டிலைட் ஃபோன்களின் விலை அதிகம் மற்றும் இது கனமானது என்பதால், இதனை எடுத்துச்செல்வது சிரமமாகவும் உள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நாடுகளில் இதனை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
January 07, 2025 4:53 PM IST