Last Updated:

Jayam ravi | ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

News18

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘வணக்கம் சென்னை’, ‘காளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய், ஜான் கொக்கேன், லால், மனோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

தொடக்கத்திலேயே ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என அதிர்ச்சி கொடுக்கிறார் நித்யா மேனன். அடுத்தடுத்து காதல் காட்சிகளும், மோதலுமாக நகர்கிறது. “இப்போல்லாம் குழந்தை பெத்துக்க ஆண் தேவையில்ல” என நித்யாமேனன் சொல்லி முடித்ததும், அடுத்த டையலாக், “உங்களின் ஃபெமினிஸ்ட் கண்ணோட்டத்தை எல்லா விஷயங்களிலும் திணிக்காதீர்கள்” என்கிறார் ஜெயம் ரவி.

3 பேரைச்சுற்றிய காதலாக தெரிகிறது. காதலும், அதைத் தொடர்ந்த மோதலுமாக விரியும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link