Last Updated:

Dhanush | இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

News18

திருமண ஆவணப் படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக, நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரியும், வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இதையும் வாசிக்க: Hansika |  குடும்ப வன்முறை…தாக்குதல் – ஹன்சிகா மீது வழக்குப் பதிவு… நடந்து என்ன?

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தினார்.



Source link