டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப் பலமுறை வலியுறுத்தி வருகிறார்.

“கனடா, அமெரிக்கா இரண்டும் ஒன்றிணைவது நிலைமையை மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், “பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில், எங்கள் இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களும் மக்கள் சமூகங்களும் ஒருவருக்கொருவர் பயனடைந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

இது குறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.

நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்றார்.



Source link