Last Updated:
இந்த நான்கு லட்சத்து 50 ஆயிரம் தோட்டக்களை சுடும் ஆயுத தொழில்நுட்பம் ஆஸ்திரேலிய நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனை 2006 ஆம் ஆண்டின் போது சீனா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு நிமிடத்திற்கு 4 லட்சத்து 50 ஆயிரம் புல்லட்டுகளை சுடக்கூடிய துப்பாக்கியை சீனா உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடியான துப்பாக்கிகளை பயன்படுத்தி ஹைப்பர்சானிக் ஏவுகணைகளையும் இடை மதித்து தாக்க முடியும். சீனாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மனிதகுல வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரத்துப்பாக்கி என்று கூறுகிறார்கள்.
அமெரிக்காவிடம் உள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தி அதிகபட்சமாக நிமிடத்திற்கு 4,500 தோட்டாக்களை சுட முடியும். இதன் அடிப்படையில் சீனா தயாரிக்கும் துப்பாக்கிகள் அமெரிக்கா வைத்திருக்கும் துப்பாக்கிகளை விட 100 மடங்கு சக்தி மிக்கவையாக இருக்கும்.
முதலில் இதற்கு தோட்டாக்களை நிரப்புவது என்பது சவாலானதாக காணப்பட்டது. ஆனால் சீன பொறியியல் வல்லுநர்கள் இந்த துப்பாக்கிக்கு பீப்பாய்களை பயன்படுத்தி தோட்டாக்களை நிரப்புகின்றனர். புல்லட்டுகள் முழுவதுமாக தீர்ந்த பின்னர் பீப்பாய் கொள்கலனில் தோட்டாக்கள் நிரப்பப்படும்.
இந்த நான்கு லட்சத்து 50 ஆயிரம் தோட்டக்களை சுடும் ஆயுத தொழில்நுட்பம் ஆஸ்திரேலிய நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனை 2006 ஆம் ஆண்டின் போது சீனா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலகட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் சீனா தற்போது இந்த அதிரடியான இயந்திர துப்பாக்கியை வடிவமைத்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
January 08, 2025 3:54 PM IST
நிமிடத்திற்கு 4.50 லட்சம் புல்லட்டுகளை சுடும் துப்பாக்கி… அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா உருவாக்கும் ஆயுதம்…