Last Updated:
பொதுவாகவே பாலா சார் படப்பிடிப்பில் கடுமையாக நடந்து கொள்வார் என்பது போன்று சில செய்திகள் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அது எதுவுமே உண்மை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு தனக்கு என்ன தேவையோ அதை அழகாக நம்மிடம் விளக்கி அவருக்கு வேண்டிய நடிப்பை பெற்றுக் கொள்வார்.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.. பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறவே செய்கிறார்கள். அபிதா, லைலா, பூஜா, ஜனனி ஐயர், வரலட்சுமி என இதற்கு முந்தைய பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார் நடிகை ரோஷினி பிரகாஷ்.
2016ல் இருந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் என மும்மொழிகளில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் ரோஷினி பிரகாஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் இவரது நடிப்பில் வெளியான மர்ஃபி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
வணங்கான் படத்தில் நடித்தது குறித்து ரோஷிணி பிரகாஷ் கூறியதாவது-
“வணங்கான் படத்திற்காக இன்ஸ்டாகிராமில் எனது ப்ரொபைல் பார்த்து எனக்கு ஆடிசனில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அங்கே போனதும் சில காட்சிகளை கூறி எனது கதாபாத்திரம் பற்றி சொல்லி நடித்துக் காட்டச் சொன்னார்கள். அங்கேயே உடனே ஓகேயும் சொல்லிவிட்டார்கள்.
பொதுவாகவே பாலா சார் படப்பிடிப்பில் கடுமையாக நடந்து கொள்வார் என்பது போன்று சில செய்திகள் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அது எதுவுமே உண்மை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு தனக்கு என்ன தேவையோ அதை அழகாக நம்மிடம் விளக்கி அவருக்கு வேண்டிய நடிப்பை பெற்றுக் கொள்வார்.
இயக்குநர்கள் சமுத்திரக்கனி, மிஸ்கின், ஏ.எல். விஜய் என மிகப் பெரிய ஜாம்பவான்கள் இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றியதால் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு எனக்கு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல தான் இருந்தது.
இதையும் படிங்க – Jayam Ravi | காதலும்… மோதலும்.. – எப்படியிருக்கிறது ‘காதலிக்க நேரமில்லை’ டிரெய்லர்?
இவர்களுடன் இணைந்து நடிக்கும்போது தங்களை ஒரு பெரிய இயக்குநர்களாகவோ நடிகர்களாகவோ அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்வதில்லை. புதியவர் தானே என யாரையும் நினைக்காமல் அவர்களுக்கு வேண்டியதையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இப்படி நான்கு இயக்குநர்களுடன் சேர்ந்து ஒரே படத்தில் பணியாற்றுவது என்பது ரொம்பவே அரிதாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு. அது எனக்கு கிடைத்திருக்கிறது. என்று தெரிவித்தார்.
January 08, 2025 8:04 PM IST