Last Updated:
Nagarjuna | நடிகர் நாகர்ஜுனா தான் ஜிம்முக்கு செல்வதில்லை எனவும், ஆனால் வாரத்தில் 5, 6 நாட்கள் காலையில் எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் நாகர்ஜுனா தான் ஜிம்முக்கு செல்வதில்லை எனவும், ஆனால் வாரத்தில் 5, 6 நாட்கள் காலையில் எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் நாகர்ஜுனா தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “வாரத்தில் 5,6 நாட்கள் காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி செய்வேன். நான் ஜிம்முக்கு போவதில்லை. மாறாக நான் நடைபயிற்சி மேற்கொள்வேன்.
ஸ்விம்மிங் செய்வேன், கோல்ஃப் விளையாடுவேன். வாரத்தில் 5-6 நாட்கள், தினமும் காலையில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை உடல் ஆரோக்கியத்திற்காக ஒதுக்குங்கள்.
ஆரோக்கியமான தூக்கம், அதிகமாக தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 7 அல்லது 7.30 மணிக்குள் நான் என்னுடைய இரவு உணவை முடித்துக் கொள்வேன். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்கிறது. 12: 12 மணி நேர இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறேன். 12 மணி நேரம் சாப்பிட்டு 12 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.
January 09, 2025 8:06 AM IST