Last Updated:
play back singer Jayachandran : உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியவர்.
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியவர். நீங்கள் தினமும் முனுமுனுக்கும் பல பாடல்களை பாடியவர் அவர்தான். ஆனால் இந்த பாடல்களை பாடியவர் அவர்தான் என்பது பலருக்கு தெரியாது. அவர் என்னென்ன பாடல்களை பாடியுள்ளார் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்:
ராசாத்தி உன்ன:
காத்திருந்து காத்திருந்து:
தாலாட்டுதே வானம்:
வசந்த கால நதிகளிலே:
கொடியிலே:
தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். 80 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.
பாடகர் ஜெயச்சந்திரன் 80 மற்றும் 90களில் அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இன்றும் இவரது பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாடகர் ஜெயச்சந்திரன் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
January 09, 2025 9:36 PM IST