Last Updated:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளது.
காயம் காரணமாக தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
2023 நவம்பரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் இறுதிப் போட்டிக்கு பின்னர் காயம் காரணமாக ஷமி அணியில் இடம்பெறவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் அசத்தலாக பந்துவீச்சு பந்து வீசி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஷமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடல் தகுதி தொடர்பாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழுவினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சிகிச்சை மேற்கொண்ட பின்னர் முகமது ஷமி ஓய்வில் சிறிது காலம் இருந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கியமான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அவர் இடம் பெறவில்லை. தற்போது அவர் விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை தொடரில் வங்காள அணிக்காக விளையாடுகிறார். அவருக்கு உதவியாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து பிசியோ அல்லது பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பரோடாவில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டி போட்டியின் போது பிசிசிஐயின் தேர்வு குழுவினர் ஷமியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் ஷமியின் பெர்ஃபார்மன்ஸை கணக்கிட்டு அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று காயம் காரணமாக தற்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் உள்ளார். அவர் முழு உடல் தகுதி அடைந்து விட்டாரா என்பது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி ரிப்போர்ட் அளிக்க வேண்டும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளது.
January 09, 2025 9:24 PM IST