Last Updated:
இந்தியாவில் உள்ள யூஸர்களுக்காக புதிய ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS 15.0) வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15ஐ ஒன்பிளஸ் கொண்டுவந்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவிலும், இன்னும் சில நாடுகளிலும் OnePlus 13 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OnePlus 13R எனப்படும் மலிவு விலை ஃபிளாக்ஷிப் டிவைஸுடன் புதிய OnePlus ஃபிளாக்ஷிப் மாடல் வருகிறது. அதாவது, இந்த சீரிஸில் OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகிய 2 மொபைல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களுமே ஸ்னாப்டிராகன் சிப்செட்டைக் கொண்டுள்ளன. ஹாசல்பிளாட் டியூன் செய்யப்பட்ட கேமராக்கள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள யூஸர்களுக்காக புதிய ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS 15.0) வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15ஐ ஒன்பிளஸ் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் OnePlus 13 சீரிஸ் விலை…
இந்தியாவில் OnePlus 13 மொபைலின் அறிமுக விலை பேஸ் மாடலுக்கு ரூ.69,999ல் தொடங்குகிறது, 16GB ரேம் வேரியன்ட்டிற்கு ரூ.76,999 வரையும், 24GB மாடலுக்கு ரூ.89,999 வரையும் விலை உள்ளது. அதே நேரம் OnePlus 13R மொபைலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ.42,999க்கும், இதன் டாப் மாடலின் விலை ரூ.49,999ஆகவும் உள்ளது. OnePlus 13 மற்றும் 13R ஜனவரி 13 முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும்.
OnePlus 13 சீரிஸ் மொபைல்களின் அம்சங்கள்:
OnePlus 13 மொபைல் பெரிய 6.82-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆனால், இரண்டு மாடல்களிலும் LTPO 4.1 AMOLED பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது யூஸர்கள் 1 முதல் 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட் பெறுவார்கள். OnePlus 13ன் டிஸ்ப்ளே செராமிக் கார்டுடன் வருகிறது. அதே நேரம் 13R மொபைலின் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் வருகிறது. OnePlus 13 மாடலில் Snapdragon 8 Elite மற்றும் OnePlus 13R மாடலில் Snapdragon 8 Gen 3 ஆகிய ப்ராசஸர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனம் 24GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய பிரீமியம் மாடலை வழங்குகிறது. அதே நேரம் 13R ஸ்மார்ட் ஃபோன் அதிகபட்சமாக 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் கிடைக்கிறது. OnePlus 13 மாடலில் வைட், டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ராவைட் சென்சார்கள் கொண்ட 50MP டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. அதே நேரம் OnePlus 13R ஆனது 50MP வைட் மற்றும் டெலிஃபோட்டோ ரியர் லென்ஸ்கள் (வெவ்வேறு சென்சார்கள்) உடன் வருகிறது. ஆனால் 8MP அல்ட்ராவைட் லென்ஸுடன் வருகிறது.
ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 வெர்ஷனைப் பெறுகின்றன, இதில் சிறிய UI மாற்றங்கள் மற்றும் புதிய AI சேர்த்தல்கள் உள்ளன. நிறுவனம் இந்த டிவைஸ்களுக்கு நான்கு OS அப்கிரேட்ஸ்களையும், எதிர்கால சிக்கல்களிலிருந்து அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க 6 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ்களையும் நிறுவனம் வழங்கும்.
இதையும் படிக்க: விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 4… இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?
ஒன்பிளஸ் 13 மற்றும் 13ஆர் ஆகியவை 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. இவை புதிய சிலிகான் கிரேட் பேட்டரி டெக்னாலஜியைக் கொண்டிருக்கின்றன. ஃபிளாக்ஷிப் மாடலில் அதாவது OnePlus 13 மொபைலில் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. அதே சமயம் OnePlus 13R மொபைலில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மட்டுமே உள்ளது.
January 10, 2025 12:57 PM IST