Last Updated:

Vanangaan Review: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான வணங்கான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து இதோ…

X

சூர்யா

சூர்யா இந்த படத்தை மிஸ் பண்ணிட்டார்… வணங்கான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அந்தவகையில் மயிலாடுதுறை இன்று இப்படம் திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை கொண்ட படங்களை இயக்கி பேமஸ் ஆனவர் பாலா. அவர் இயக்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸ் ஆகாமலிருந்த நிலையில், தற்போது வணங்கான் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் முதலில் சூர்யா தான் நாயகனாக நடித்திருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகியதை அடுத்து அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பாலா.

இதையும் படிங்க: ISRO Chairman: வறுமையிலிருந்து உயர்ந்தவர்… இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் குறித்து உறவினர்கள் பெருமிதம்…

இந்த படத்தைப் பார்த்து விட்டு வந்த பொதுமக்கள் கூறும்போது மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பதாகவும், வழக்கான பாலா படம் போல் இந்த படமும் இருப்பதாகவும், பெண்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தன் கதைக்களம் மூலம் பாலா நன்றாகச் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படத்தில் எந்தவித தொய்வும் இல்லை என்றும், பாலாவின் ஸ்கிரீன் பிளே வேற லெவல் என்றும், படத்தின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக முதல் பாதியில் கதை கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் கதை வேகமாக நகர்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link