Last Updated:
Pongal Seer Varisai: பொங்கல் பண்டிகைக்குச் சீர் கொடுக்க பல வகைகளில் பாத்திரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நம் தமிழ் மரபுப்படி பொங்கல் சீர் கொடுப்பது வழக்கம். புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்குத் தாய் வீட்டாரிடம் இருந்து பொங்கல் சீர்வரிசைகள், புத்தாடைகள், கரும்பு, வாழைத்தார், மஞ்சள் குலை போன்ற பல வகையான பொருட்கள் பொங்கப்பொடியாக வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிசி, கரும்புடன் வெண்கலம் அல்லது பித்தளை பானை மற்றும் பாத்திரங்களும் பிறந்த வீட்டு சீராக வழங்கப்படும். இவ்வாறு பொங்கல் சீர் வழங்குவதற்காகப் பல பாத்திரக் கடைகளிலும் பல வகைகளில் பாத்திரங்கள் அணிவகுத்துள்ளன.
இதுகுறித்து விற்பனையாளர் அனிதா கூறுகையில், “பொங்கல் பண்டிகைக்குப் புதுமணப் பெண்களுக்குச் சீர் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கப்படும் சீர்வரிசை பாத்திரங்களில் முக்கியமாகக் காணப்படுவது பொங்கல் பானை தான். அதில் மதுரப் பானை, வெண்கல உருளி, பித்தளை உருளி, நெய் தவளை, வெண்ணெய் சட்டி போன்ற பானை வகைகள் மூன்று சீர், இரண்டு சீராக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: ISRO Chairman: வறுமையிலிருந்து உயர்ந்தவர்… இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் குறித்து உறவினர்கள் பெருமிதம்…
மேலும், இதனுடன் சேர்த்து பெண்களுக்குக் குத்து விளக்கு, துணை விளக்கு, அவர்கள் கைகளில் எடுத்துச் செல்வதற்காகக் காமாட்சி விளக்கு மற்றும் சாம்பிராணி கரண்டி, பூ உருளி, சூடம் தட்டு, பூஜை மணி போன்ற அனைத்துப் பூஜைப் பொருட்களையும் சீராகக் கொடுக்கின்றனர்.
இது மட்டுமின்றி நெல் கொடுப்பதற்காக உழக்கு, அதனைப் படி என்றும் அழைப்பதுண்டு, பெண்களுக்குக் குங்குமச் சிமிழ், முதற் கடவுளான பிள்ளையார் சிலை மற்றும் வீட்டில் அன்னம் நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காக அன்னபூரணி சிலையும் சீராகக் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
January 10, 2025 6:17 PM IST