Last Updated:
‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’.
இன்று வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திலிருந்து ஒரு பாடல் நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதையை படமாக்கியுள்ளார் ஷங்கர். கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகியுள்ள சூழலில், ரசிகர்கள் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடல் இன்னும் சில நாட்களுக்குத் திரையில் பார்க்க முடியாது. கேம் சேஞ்சர் படத்தில் தமன் இசையமைத்துள்ள லைரானா என்ற பாடலை கார்த்திக் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். விவேக் இதனை எழுதியுள்ளார். இன்ஃப்ராரெட் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய பாடல் இது எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்பாடல் திரைப்படத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து பாடல் மீண்டும் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்திலிருந்து முக்கிய பாடல் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
January 10, 2025 7:15 PM IST