Last Updated:
அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முன்பு கிரேட் ரிபப்ளிக் டே சேல் என்ற விற்பனையை அறிவித்து வருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு மீண்டும் ஷாப்பிங் சீசன் வந்துவிட்டது. அமேசான் இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் பெரிய விற்பனையான கிரேட் ரிபப்ளிக் டே சேல் என்ற விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முன்பு இந்த விற்பனையை அறிவித்து வருகிறது.
இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், பிசி-க்கள் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஆண்டு விற்பனையில், யூசர்கள் வீட்டு மற்றும் சமையலறைக்கு தேவையான பொருட்கள், டிவிகள் மற்றும் பல தயாரிப்புகள் மீது கவர்ச்சிகரமான சலுகைகளை பெறுவார்கள். அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் பற்றி விரிவாக பார்ப்போம்.
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் விலை மற்றும் தள்ளுபடி:
கிரேட் குடியரசு தின சேல் ஆனது நுகர்வோர் தங்களுக்குப் பிடித்தமான தயாரிப்புகளை மலிவு விலையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பாகும். அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஆனது வரும் ஜனவரி 13ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். இருப்பினும், பிரைம் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் (அமேசான் பிரைம் மெம்பர்ஸ்) விற்பனை தொடங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே விற்பனைக்கான அக்சஸைப் பெறுவார்கள். அதாவது, பிரைம் உறுப்பினர்களுக்கு ஜனவரி 13ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனை தொடங்கும்.
நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் மீது ஆர்வமாக இருந்தால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த குடியரசு தின விற்பனையில் அமேசான் ஆனது ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.45,000, டேப்லெட்டுகளுக்கு ரூ.7,000, ஸ்மார்ட் டிவிகளில் ரூ.5,500 மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்குகிறது. SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் பொருட்களை வாங்கும் யூசர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியின் பலனைப் பெறுவார்கள்.
ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் கட்டணமில்லா EMI ஆப்ஷனும் கிடைக்கும். இது தவிர, அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், லேப்டாப்கள், டிவிக்கள், டேப்லெட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுக்கான தள்ளுபடியும் இந்த கார்டுடன் கிடைக்கும்.
இதையும் படிக்க: பிபிஎஃப் – வரிச்சலுகையுடன் கூடிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சிறந்த சிறுசேமிப்புத் திட்டம்…!
தள்ளுபடி விலைகளைப் பொறுத்தவரை, அமேசான் Echo Pop, Echo 4th gen மற்றும் Echo Show 8 ஆகியவை விற்பனையின்போது பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இது தவிர எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் புரொஜெக்டர்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடியும், மொபைல்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
January 10, 2025 6:08 PM IST