Last Updated:

Jayam Ravi | “மீண்டும் எழாமல் இருந்தால் தான் தோல்வி. இந்த ஆண்டு நான் மீண்டும் எழுவேன் என்று சொல்கிறேன். அடுத்து சுதா கொங்கராவுடன் படம் பண்ணுகிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சி. நல்ல மாற்றங்களை உணர முடிகிறது” என ஜெயம் ரவி பேசினார்.

News18

“என் தரப்பில் எந்த தவறும் இல்லாதபோது நாம் ஏன் துவண்டு போக வேண்டும்? அடுத்த வருடமே, ரோமியோ ஜூலியட், பூலோகம், தனி ஒருவன் என 3 படங்கள் ஹிட் கொடுத்தேன். ஒருவர் தோற்றுப்போய் துவண்டு போய் கீழே விழுந்துவிட்டால் தோல்வி கிடையாது. அவர் மீண்டும் எழாமல் இருந்தால் தான் தோல்வி” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, “வெற்றி இல்லாமல் தோல்வி இல்லை. தோல்வி இல்லாமல் வெற்றியும் இல்லை.

இதையும் வாசிக்க: Nayanthara | “யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும்…” – நயன்தாரா மறைமுக சாடல்

எனக்கு 2014-ல் தோல்வியான நேரம் இருந்தது. 3 வருடம் ஒரே படம் பண்ணேன். அப்போது என்னால் ஒரு இன்டர்வியூ கூட கொடுக்க முடியவில்லை. எனக்கு கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் படம் எதுவும் சரியாக போகவில்லை. தோல்வி அடைந்தது. அப்போது நான் எதுவும் தவறு செய்திருக்கிறேனா என்றெல்லாம் யோசித்தேன். தவறான கதையை தேர்வு செய்திருக்கிறேனா? என எண்ணிப்பார்த்தேன்.

அப்படி யோசிக்கும்போது என் தரப்பிலிருந்து எந்த தப்பும் எனக்கு தெரியவில்லை. என் தரப்பில் எந்த தவறும் இல்லாதபோது நாம் ஏன் துவண்டு போக வேண்டும்? அடுத்த வருடமே, ரோமியோ ஜூலியட், பூலோகம், தனி ஒருவன் என 3 படங்கள் ஹிட் கொடுத்தேன். ஒருவர் தோற்றுப்போய் துவண்டு போய் கீழே விழுந்துவிட்டால் தோல்வி கிடையாது.

அவர் மீண்டும் எழாமல் இருந்தால் தான் தோல்வி. இந்த ஆண்டு நான் மீண்டும் எழுவேன் என்று சொல்கிறேன். அடுத்து சுதா கொங்கராவுடன் படம் பண்ணுகிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சி. நல்ல மாற்றங்களை உணர முடிகிறது” என பேசினார்.



Source link