அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியதில்லை.

இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளிதான் என்பதை உறுதி செய்த நீதிபதி, அவருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் என எதுவுமின்றி ‘நிபந்தனையின்றி விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு எந்தச் சிரமமும் இன்றிச் செல்லலாம் என்றாலும், அவரது பதிவேடுகளில் இந்த வழக்கில் குற்றவாளி எனப் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த ஆண்டு மே மாதம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவரை “நிபந்தனையின்றி விடுவிப்பதை” நீதிபதி தண்டனையாக விதித்துள்ளார்.

இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் அதிபராக வெள்ளை மாளிகையில் பணியாற்றுவார்.



Source link