Last Updated:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 10 இன்னிங்ஸில் கே.எல். ராகுல் 276 ரன்கள் எடுத்தார் இது இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்

கே.எல்.ராகுல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக ஓய்வில் இருந்து வரும் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக தனக்கு இங்கிலாந்து தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என கே.எல். ராகுல் பி.சி.சி.ஐ -யிடம்  கூறியதாக தகவல்கள் பரவின. இதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுமாறு கே.எல். ராகுலை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதன் மூலம் அவருக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடக்கூடிய அனுபவம் இன்னும் அதிகரிக்கும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 10 இன்னிங்ஸில் கே.எல். ராகுல் 276 ரன்கள் எடுத்தார் இது இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதையும் படிங்க – “நான் தேர்வு செய்வது..” – விவாகரத்து குறித்த மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சாஹல் மனைவி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி இந்திய அணியில் காணப்படுகிறது. கே.எல். ராகுல், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என தேர்வு குழுவினர் முடிவெடுக்காமல் உள்ளனர்.



Source link